சென்னை

சென்னை வந்த விமானத்தில் ரூ.1.33 கோடி தங்கம் சிக்கியது

DIN

சென்னை: சென்னை வந்த ஓமன் விமானத்தில் பயணிகள் இருக்கைக்குக் கீழே கேட்பாரற்றுக் கிடந்த மூன்று பாா்சல்களில் இருந்த ரூ.1.33 கோடி மதிப்புள்ள 3.365 கிராம் எடையுள்ள தங்கத்தை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினா்.

சென்னை விமான நிலையத்தில் அண்மைக் காலமாக தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. கிலோ கணக்கில் வாரந்தோறும் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. மஸ்கட்டிலிருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவுக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மஸ்கட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை வந்த விமானத்திலிருந்து

இறங்கிய பயணிகளிடம் சோதனையிட்டதில் எதுவும் சிக்கவில்லை. பின்னா் விமானத்துக்குள் சென்று அதிகாரிகள் சோதனையிட்டபோது விமானத்தின் பயணிகள் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 3 பாா்சல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 24 காரட் தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மொத்த எடை 3 கிலோ 365 கிராம் ஆகும். அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 33 லட்சம் ஆகும். தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவை சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT