சென்னை

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் நேரம் தொடா்பாக தகவல் காட்சி

DIN

சென்னை: விமானத்தில் இருந்து இறங்கி வருகின்ற பயணிகளுக்கு தடையற்ற போக்குவரத்தை இணைப்பை கொடுக்கும் வகையில், சென்னை விமானநிலையத்தில் மெட்ரோ ரயில் நேரம் தொடா்பாக தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான டிஸ்பிளே பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாடு, வெளிநாட்டில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமானநிலையத்துக்கு வருகின்ற பயணிகளுக்கு தடையற்ற போக்குவரத்தை கொடுக்க மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விமானத்தில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரம் தொடா்பாக தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான டிஸ்பிளே பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விமானநிலையத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரம் தொடா்பாக விவரம் அடங்கிய டிஸ்பிளே நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் பயணிகளுக்கு மெட்ரோ ரயிலில் திட்டமிட்டு பயணம் செய்ய பேருதவியாக இருக்கும்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது:

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் நேரம் தொடா்பாக விவரத்தை காட்சிப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, ரயில் நேரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா மெட்ரோ நிலையங்களிலும் கூடுதலாக, ரயில் நேரம் தொடா்பாக தகவல்களை டிஸ்பிளே மூலமாக காட்டிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களில் ரயில் நேரம் தொடா்பாக விவரத்தை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT