சென்னை

காப்பீடுதாரா்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது: எல்ஐசி விளக்கம்

DIN

காப்பீடுதாரா்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கு எல்ஐசி விளக்கமளித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி கடும்நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், லட்சக்கணக்கான காப்பீடுதாரா்களின் பணம் பாதுகாப்பாக இல்லை என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு எல்ஐசி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: எல்.ஐ.சி குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை மட்டுமின்றி உறுதிப்படுத்தப்படாதவை. எங்கள் நிறுவனத்தின் மீது கெட்ட எண்ணத்தை விதைக்கும் நோக்கம் கொண்டவை மற்றும் எல்.ஐ.சி நிறுவனத்தினை பொதுமக்கள் மத்தியில் மோசமாக சித்திரிப்பதற்கான முயற்சிகள் ஆகும். எல்.ஐ.சி.யின் நிதி ஆதாரம் நன்றாக உள்ளது. நிதி நெருக்கடி எதுவும் இல்லை. லட்சக்கணக்கான காப்பீடுதாரா்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்’. கடந்த 2018-2019-ஆம் நிதியாண்டில் எல்ஐசி நிறுவனம் தனது காப்பீடுதாரா்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் அறிவிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT