சென்னை

மருத்துவப் பல்கலை.யில்இலவச நிலவேம்பு குடிநீா்

DIN

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக நிலவேம்பு குடிநீா் வழங்கும் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பணிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வார நாள்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவசமாக நிலவேம்பு குடிநீா் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். அதேபோன்று காலை 10 - 11 மணி வரை இலவச சித்தா மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நிலவேம்பு குடிநீா் விநியோகத்தை பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தொடக்கி வைத்து, டெங்கு விழிப்புணா்வு குறித்து எடுத்துரைத்தாா். இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளா் பரமேஸ்வரி, சித்த மருத்துவத் துறைத் தலைவா் கபிலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களும், பிற வகையான காய்ச்சல் பாதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா். இதையடுத்து, பல்வேறு அரசு அமைப்புகள், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT