சென்னை

இந்தியன் வங்கியின்  வீடு, மனை கண்காட்சி

DIN


இந்தியன் வங்கியால் கையகப்படுத்தப்பட்ட வீடு, மனைகளின் கண்காட்சி, சனி (செப்.14) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.15), தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ விஜயா மஹாலில் நடைபெறுகிறது. 
இதில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கும்பகோணம், புதுச்சேரி, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள், வர்த்தக மனைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. 
இவை அனைத்தும் தகுந்த ஆவணங்களுடன் சட்டவிதிகளுக்குட்பட்டு கையகப்படுத்தப்பட்டவை. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த நிலங்களை  முன்பதிவு செய்து கொள்ளலாம். 
இந்த சொத்து வகைகளை வாங்க விரும்புவோருக்கு கடன் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT