சென்னை

ரயிலில் கஞ்சா கடத்தல்: அஸ்ஸாம் இளைஞர்கள் கைது

DIN


அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் 15 கிலோ கஞ்சாவை கடத்திய  இரண்டு இளைஞர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி கமாக்கயாவில் இருந்து கர்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் செல்லும் விரைவு ரயில் கடந்த 11-ஆம் தேதி மதியம் கமாக்கயா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 
இந்த ரயில் வெள்ளிக்கிழமை மதியம் சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. இந்த ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளை ரயில்வே காவல் ஆய்வாளர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீஸார் கண்காணித்தனர். அப்போது  சந்தேகத்துக்கிடமான வகையில் இரண்டு வடமாநில இளைஞர்களின் நடவடிக்கைகள் இருந்தன.
அதையடுத்து அவர்களை அழைத்து விசாரித்தபோது,  அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர், இதனால், சந்தேகமடைந்த போலீஸார்,  அவர்களது பையை சோதனை செய்தனர். 
சோதனையில், 10 பொட்டலங்களில் 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.  விசாரணையில், அவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த மொச்சலேம் உத்தின்(30), மணி ரூகன் (26) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அஸ்ஸாமில் இருந்து, விற்பனை செய்வதற்காக சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. 
இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர். மேலும் ,அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT