சென்னை

ஜமீன் பல்லாவரத்தில் 9 அடி உயர ராகு பகவான் சிலை

DIN

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் மலைக்கோயில் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் 9 அடி உயர ராகு பகவான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ராகு, கேது தோஷமுள்ளவர்கள், திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை ஆகிய குறைகளுடன் இருப்பவர்கள் ஆலயத்திற்கு நேரில் வந்து பரிகார பூஜை செய்து வழிபட்டால் குறைகள் தீரும் என்பது சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட கால நம்பிக்கையாக உள்ளது. நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றித் தரும் துர்க்கையம்மன் ஆலயத்தில் வேறு எங்கும் இல்லாத அளவில் மிக உயரமான ராகு பகவான் சிலை அமைக்க பக்தர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் முடிவு செய்தனர். ரூ 10 லட்சம் செலவில் 9 அடி உயர ராகு பகவான் சிலையை நிறுவி, கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராகு,கேது பகவானுக்கு யாகபூஜை செய்து, வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT