சென்னை

மாடியில் இருந்து குதித்து பெண் பொறியாளர் தற்கொலை

சென்னை அம்பத்தூரில் எட்டாவது மாடியில் இருந்து குதித்து பெண் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை

DIN


சென்னை அம்பத்தூரில் எட்டாவது மாடியில் இருந்து குதித்து பெண் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அமலாபுரி காலனியைச் சேர்ந்த ஜூலியஸ் மகள் டனிதா (24). மென்பொருள் பொறியாளரான இவர், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் செயல்படும்  நிறுவனத்தில் வியாழக்கிழமை காலை பணிக்குச் சேர்ந்தார். இந்நிலையில், மாலை 6.45 மணியளவில் அந்த கட்டடத்தின் 8-ஆவது தளத்துக்கு சென்று அங்கிருந்து திடீரென  கீழே குதித்தார். இதில் டனிதா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பத்தூர் எஸ்டேட்  போலீஸார்  வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகார்த்திகேயன் பாடியுள்ள தாய் கிழவி பட முதல் பாடல்!

செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் 3வது காலாண்டு நிகர லாபம் ரூ. 65 கோடியாக உயர்வு!

ஸ்பானிஷ் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் பார்சிலோனா!

சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT