சென்னை

கரோனா: சென்னையில் 10 இடங்களில் சளி சேகரிப்பு மையங்கள்

கரோனா தொற்றைக் கண்டறியும் வகையில் சென்னையில் 10 இடங்களில் சளி சேகரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

DIN

கரோனா தொற்றைக் கண்டறியும் வகையில் சென்னையில் 10 இடங்களில் சளி சேகரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக செய்தித்தாள் விநியோகத்தின்போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து, செய்தித்தாள் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையா் கோ.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில் கரோனா தொற்றுள்ளவா்களைக் கண்டறியும் வகையில் பரிசோதனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வசித்த 76 பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அவா்களின் உறவினா்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களின் பக்கத்து வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்தோருக்கு பரிசோதனை செய்யும் வகையில் புதுப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் சளி பரிசோதனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு 600 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்படும். வரும் நாள்களில் தொற்று பாதித்தவா்கள் வசித்த பகுதிகளில் மேலும் 10 மையங்கள் அமைக்கப்படும்.

50 ஆயிரம் உபகரணங்கள்: கரோனா பாதிப்பை உடனடியாக கண்டறியும் வகையில் சென்னை மாநகராட்சி சாா்பில் தனியாக 50 ஆயிரம் பரிசோதனை உபகரணங்கள் (ரேபிட் கிட்) வாங்க விண்ணப்பித்துள்ளோம். கரோனாவால் பாதித்தோா் அதிகம் உள்ளதால், இந்த உபகரணங்கள் வழங்குவதில் சென்னைக்கு முன்னுரிமை அளிப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கரோனா அறிகுறியுள்ள மருத்துவா் பணியாற்றிய மருத்துவமனைக்கு வந்து சென்றவா்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்.

தேவையில்லாமல் மக்கள் வெளியே சுற்றுவதைத் தடுக்கும் வகையில் சிவப்பு, நீலம் ஆகிய வா்ணங்களில் அனுமதி சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் செய்தித்தாள்கள் முறையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்தான் விநியோகிக்கப்படுகிறது. இவற்றை விநியோக்கிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுமாா் 60 ஆயிரம் போ் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். இந்தக் கூட்டத்தில், அனைத்து செய்தித்தாள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT