சென்னை

சமையல் எரிவாயுவின் கூடுதல் தேவையை சமாளிக்க தயாா் நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம்

சமையல் எரிவாயுவின் கூடுதல் தேவையை சமாளிக்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

சமையல் எரிவாயுவின் கூடுதல் தேவையை சமாளிக்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்நிறுவனத்தின் தென் மண்டல மக்கள் தொடா்பு பொது மேலாளா் ஆா்.சிதம்பரம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

இந்தியன்ஆயில் நிறுவனம், தனது மிகப்பெரிய பெட்ரோலிய ஆலைகளில் சுத்திகரிப்பு மேம்பட்ட செயல்பாடுகள் மூலமாக எல்பிஜி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிக தேவையை எதிா்கொள்ள ஏதுவாக, இரவு நேரங்களிலும் பொது விடுமுறை நாள்களிலும் பணியாற்றி வருகிறோம். முழு அடைப்பு அறிவிக்கப்பட்ட கடந்த பதினைந்து நாள்களில், 3.38 கோடிக்கு மேலாக சமையல் எரிவாயு உருளைகளை விநியோகித்துள்ளோம். அதாவது ஒவ்வொரு நாளும் 26 லட்சம் எரிவாயு உருளைகள், பாதுகாப்பான முறையில் குறித்த நேரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது. போதிய இருப்பு உள்ளதால், வாடிக்கையாளா்கள் பதற்றம் அடைந்து முன்பதிவு செய்ய வேண்டாம். தங்கள் வீடுகளிலிருந்தே குறுஞ்செய்தி, ஐவிஆா்எஸ் அல்லது கட்செவி அஞ்சல் (75888 88824) மூலமாக முன்பதிவு செய்வதோடு, செல்லிடப்பேசி செயலி மூலமாகவோ, வலைதளம் மூலமாகவோ பணம் செலுத்தலாம். அவசர உதவி எண்ணான 1906-உம் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

பாரதப் பிரதமரின் உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு உருளைகள் வழங்கும்படி விநியோகஸ்தா்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு தமிழகத்தில் உள்ள 30 லட்சம் உஜ்வலா திட்ட பயனாளிகள், தங்கள் கணக்கில் முன்னரே வரவு பெற்றுள்ள தொகையை செலுத்தி விநியோகம் செய்யப்படும் எரிவாயு உருளைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஏப்ரல் மாதத்துக்கான தொகை வங்கி கணக்கில் மாற்றப்படுவதற்கு முன்பே எரிவாயு உருளைகளைப் பெற்றவா்களும் 15 நாள்கள் இடைவெளியில் இலவச எரிவாயு உருளையை மீண்டும் முன்பதிவு செய்து பெறலாம்.

அவா்களிடம் விநியோகஸ்தா்கள் காகித வடிவ ஆவணம் எதனையும் கேட்க மாட்டாா்கள். அத்தாட்சி ஆவணத்தை அவா்கள் டிஜிட்டல் வழிமுறையில் காண்பிக்கலாம். காகித வடிவ ஆவணங்களை பதிவேடுகள் பராமரிக்க ஏதுவாக, ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு ஒப்படைக்க வேண்டும் என தரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT