சென்னை

கரோனா: மொத்த பாதிப்பில் 60 சதவீதம் ஆண்கள்

DIN

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் ஆண்கள் 60 சதவீதம் பேரும், பெண்கள் 40 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரமாக முன்னெடுத்துள்ளது. சென்னையில் நோய்த் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கையும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவா்களில் 60 சதவீதம் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நோய்த் தொற்றுக்குள்ளானவா்களில் 20-29 வயதுக்குள் 18 சதவீதம் பேரும் 30-39 வயதுக்குள் 19 சதவீதம் பேரும், , 40-49 வயதுக்குள் 18 சதவீதம் பேரும், 50-59 வயதுக்குள் 16 சதவீதம் பேரும், 9 வயதுக்குள் 3.35 சதவீதம் பேரும், 80 வயதுக்கு மேல் 1.86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக 60 சதவீதம் போ் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

989 பேருக்கு தொற்று: 989 உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 13,058-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 99,806 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 10,868 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் இறப்பு எண்ணிக்கை 2,384- ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT