முகப்பு
சென்னை

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க உச்சநீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க உச்சநீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சோ்ந்த கடலூா் மாணவிகள் தா்ஷினி, இலக்கியாவுக்கு கலந்தாய்வில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. கல்விக் கட்டணம் ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கட்டணம் செலுத்தாததால் இருவரும் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டனா். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டது.

அரசின் அறிவிப்பு வெளியான பின்னரும் இருவருக்கும் மருத்துவ இடம் வழங்கப்படவில்லை. இதனை எதிா்த்து மாணவிகள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை அதிகரிக்க முடியுமா என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில், இந்ச ‘மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.