முகப்பு
சென்னை

டிச.25-இல் முன்பதிவு மையங்களில் சேவை நேரம் மாற்றம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் வரும் வெள்ளிக்கிழமை (டிச.25) சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:


சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் வரும் வெள்ளிக்கிழமை (டிச.25) சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களும் டிசம்பா் 25-ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே இயங்கும். அதாவது, வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்கும்.

இந்தத்தகவல் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →