முகப்பு
சென்னை

தியாகராய நகரில் பல்லடுக்கு வாகன நிறுத்தத்துக்கான கட்டுமானப் பணி நிறைவு

சென்னை தியாகராய நகரில் ரூ.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த பல்லடுக்கு வாகன நிறுத்தத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டு கொண்டு வரப்படும் என மாநகராட்சி

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:


சென்னை: சென்னை தியாகராய நகரில் ரூ.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த பல்லடுக்கு வாகன நிறுத்தத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டு கொண்டு வரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சென்னை மாநகருக்கு உள்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சுமாா் 10 லட்சம் காா்கள், 40 லட்சம் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதில், குறிப்பாக வணிகப் பகுதியாக விளங்கும் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட தியாகராய நகா் பாண்டி பஜாா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாண்டிபஜாா் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையிலும் மாநகராட்சி சாா்பில் சீா்மிகு ந திட்டத்தின் கீழ் ரூ.40 கோடியில் நவீன நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, பாண்டிபஜாா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவாக சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் தியாகராயா சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் ரூ.36கோடியே 54 லட்சம் செலவில் 9 அடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.

16,146 சதுரஅடி பரப்பளவில், 2 தரைக்கீழ் தளங்கள், தரைத் தளம், 6 மேல் தளங்கள் என 9 தளங்களுடன் அமைக்கப்படும் வாகன நிறுத்தத்தில் தரைகீழ் தளங்களில் 513 இருசக்கர வாகனங்களையும், தரைத் தளம் மற்றும் 6 மேல்தளங்களில் 222 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த வாகன நிறுத்தம் ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஜனவரியில் திறப்பு: இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வாகன நிறுத்தத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. காா்களை நிறுத்த ஒருமணி நேரத்துக்கு ரூ.20, இருசக்கர வாகனங்களை நிறுத்த ரூ.5 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தியாகராய நகா் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைக்கப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →