சென்னை

பாரதி பதிப்பகம்

சென்னையில் பழ.சிதம்பரம் செட்டியாரால் கடந்த 1950 -ஆம் ஆண்டு பாரதி பதிப்பகம் தொடங்கப்பட்டது.

DIN

சென்னையில் பழ.சிதம்பரம் செட்டியாரால் கடந்த 1950 -ஆம் ஆண்டு பாரதி பதிப்பகம் தொடங்கப்பட்டது. எழுத்தாளர் கல்கியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் பதிப்பகம் மூலமே ஆரம்பத்தில் விலை ரூ.1 என்ற அடிப்படையில் பாரதி கவிதைகள் வெளியிடப்பட்டன. மேலும், ராஜாஜியின் "வியாசர் விருந்து' உள்ளிட்ட நூல்களும் மிகக்குறைந்த விலையில் வெளியிடப்பட்டுள்ளன.
பின்னர்,  இந்தப் பதிப்பகத்தைத் தொடக்கி வைத்த கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்', "பாத்திபன் கனவு', "குமரியும் குன்றமும்', "சிவகாமியின் சபதம்' உள்ளிட்ட நூல்களையும் பதிப்பகம் சார்பில் வெளியிட்டுள்ளனர். இதுவரை, ஆயிரக்கணக்கான தலைப்புகளில் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ள பாரதி பதிப்பகமானது சமீபகாலமாக சாண்டில்யனின் நூல்களையும், அண்ணாவின் நூல்கள், கருணாநிதியின் குறளோவியம், சிறுகதைகள், பேசும் கலை வளர்ப்போம் உள்ளிட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளனர்.  
பக்தி புராணங்கள், தனித்திறன் மேம்பாட்டு நூல்கள் என பல பிரிவுகளில் நூல்களை வெளியிட்டு வருவதாக குறிப்பிடுகிறார் பதிப்பகத்தின் உரிமையாளர் சித.ராஜேந்திரன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT