சென்னை

நீட் தேர்வுக்கு தமிழில் இலவச பயிற்சி

DIN

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தமிழ் வழி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகளை ஜூன் 3-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி  ஸூம் செயலி மூலமாக இலவசமாக வழங்கவுள்ளது. 

இதற்காக தமிழ் வழியில் நீட் எழுதும் மாணவர்களுக்கு மிகத் தரமான மாதிரி வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி நிபுணர் குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்தப் பயிற்சியில் குறிப்பிட்ட அளவிலான மாணவர்களை மட்டுமே சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் NEET TAMIL  என TYPE செய்து தங்களது முழு முகவரியுடன் 75501 51584 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் ஆப் மூலமாக ஜூன் 2-ஆம் தேதிக்குள் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது குறித்து மேலும் தகவல் பெற 79044 48456, 75501 51584 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அந்த அகாதெமி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT