சென்னை

ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமைத் தடுப்பு சட்ட வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

DIN

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான திமுக அமைப்புச் செயலாளருக்கு  ஆர்.எஸ.பாரதி வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் மே 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.

சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் கருத்தரம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்களின் அடிப்படையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் ஆர்.எஸ.பாரதியை கடந்த மே 23-ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு மே 31-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்த நிலையி,  ஆர்.எஸ்.பாரதி நீதிபதி செல்வக்குமார் முன் ஆஜரானார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT