சென்னை

பொதுமுடக்க காலத்தில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? உயர்நீதிமன்றம் கேள்வி

DIN

பொதுமுடக்க காலத்தில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மனுதாரர் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், கரோனா பொதுமுடக்கத்தின் காரணணாக வீட்டு உபயோக மின் இணைப்புகளுக்கும், தாழ்வழுத்த மின் பயன்பாட்டாளர்களுக்கும் முந்தைய காலங்களில் செலுத்திய மின் கட்டணத்தையே தற்போது செலுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. நிலைமை சீரானதும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு, பயன்பாட்டாளர்கள் ஏற்கனவே செலுத்திய தொகை போக எஞ்சியத் தொகை வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் தற்போது 4 மாதங்களுக்கு மொத்தமாக மின் நுகர்வைக் கணக்கீடு செய்வதால் வழக்கத்தை விட அதிகமான மின் கட்டணம் செலுத்தும் நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 1.93 கோடி மின் இணைப்புகள் கொண்ட வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் வழக்கமான கட்டணத்தை விட 12 முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின் நுகர்வோர்கள் கடந்த 4 மாதங்கள் பயன்படுத்திய மின்சாரத்தை மொத்தமாக கணக்கிடாமல், இரண்டு மாதங்களாக பிரித்து மின் நுகர்வைக் கணக்கிட்டு அதற்கேற்ற வகையில் கட்டணத்தை நிர்ணயிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதில்மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமுடக்க காலத்தில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் மனுதாரர் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை வரும் ஜூலை 6- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT