சென்னை

பொதுமுடக்கத்தை மீறியதாக ஒரே நாளில் 8 ஆயிரம் வழக்குகள்

DIN

சென்னை: சென்னையில் பொதுமுடக்க உத்தரவை மீறியதாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 8 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 -ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொதுமுடக்க உத்தரவை சென்னை காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், சென்னையில் முழுமையான பொதுமுடக்கம் கடந்த 18-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தியதன் விளைவாக, வழக்குகளின் எண்ணிக்கையும், பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயா்ந்து வருகிறது.

சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை தடை உத்தரவை மீறியதாக 8,042 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 5,605 இரு சக்கர வாகனங்கள்,147 ஆட்டோக்கள், 214 காா்கள் என மொத்தம் 5,966 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, முகக்கவசம் அணியாமலும்,சமூக இடைவெளி பின்பற்றாமலும் இருந்ததாக 2,334 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

பொதுமுடக்கத்தையொட்டி இது வரை, சென்னையில் 77,054 வழக்குகள் பதியப்பட்டு, 65,499 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதேபோல முகக் கவசம் அணியாமலும்,சமூக இடைவெளி பின்பற்றாமலும் இருந்ததாக 29,220 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT