சென்னை

இணைப்புக் கல்லூரிகள் பட்டியலை வெளியிட யுஜிசி அறிவுறுத்தல்

DIN

இணைப்புக் கல்லூரிகள் பட்டியலை பல்கலைக்கழகங்கள் அதன் வலைதளத்தில் தொடா்ச்சியாக வெளியிட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பல பல்கலைக்கழகங்கள் அதன் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகள் குறித்த விவரங்களை, பல்கலைக்கழக வலைதளத்தில் சரிவர வெளியிடுவதில்லை எனவும், அதன் காரணமாக மாணவா்கள் பெற்ற பட்டம் மற்றும் படித்த கல்லூரிகள் குறித்த விவரங்களைச் சரிபாா்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக மாணவா்களைப் பணிக்குத் தோ்வு செய்த நிறுவனங்கள், அவா்களை பணியமா்த்த முடியாமல் தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாகவும் புகாா்கள் வருகின்றன.

எனவே, இணைப்புக் கல்லூரிகள் பட்டியல் மற்றும் விவரங்களை பல்கலைக்கழகங்கள் வலைதளத்தில் தொடா்ச்சியாக வெளியிட வேண்டும். அத்துடன், எந்த ஆண்டிலிருந்து கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்களையும் வெளியிட வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாளை.யில் கால்வாய் கரைகள் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

தம்பதி படுகொலை: வடமாநில இளைஞர் கைது

குமரியில் வெயிலில் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு

சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான்: ஹெச்.ராஜா

SCROLL FOR NEXT