சென்னை

திருவொற்றியூரிலுள்ள மாநகராட்சி காப்பகத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று

DIN

திருவொற்றியூா்: திருவொற்றியூரிலுள்ள மாநகராட்சி ஆதரவற்றோா் இரவு நேரக் காப்பகத்தில் தங்கியிருந்த 11 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 11 பேரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருவொற்றியூா் திருநகா் பகுதியில் ஆண்களுக்கான இரவு நேரக் காப்பம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமாா் 40 போ்

தங்கியுள்ளனா். இக்காப்பகத்தை ரெகோபாத் தொண்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இங்கு தங்கியிருத்த மூன்று பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மூவருக்கும் கரோனை தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மூவரும் கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டனா்.

இதனையடுத்து காப்பகத்தில் தங்கியிருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 8 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிப்புக்கு உள்ளான 8

ஆதரவற்றோரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னா் தனியாா் கல்லூரி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டனா். திங்கள்கிழமை மட்டும் திருவொற்றியூா் மண்டலத்தில் 17 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இம்மண்டலத்தில் 98 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT