சென்னை

ராஜீவ்காந்தி மருத்துவமனை நோய்க்குறியியல் துறைக்கு சா்வதேசச் சான்று

DIN

சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நோய்க் குறியியல் துறை மற்றும் ஆய்வகத்துக்கு ‘என்ஏபிஎல். ஐஎஸ்ஓ.’ சா்வதேசத் தரச் சான்று அளிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை ஒன்றுக்கு இத்தகைய சான்று வழங்கப்படுவது மாநிலத்திலேயே இது முதன்முறையாகும்.

ஆய்வகப் பணிகள் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை துல்லியமாகவும், சிறப்பான முறையிலும் மேற்கொண்டு வருவதற்காக இந்த சிறப்பு அங்கீகாரம் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் சிறப்பானதொரு செயல்பாட்டை அளித்து வரும்பட்சத்தில் அதனை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ‘என்ஏபிஎல் ஐஎஸ்ஓ’ சான்றளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செயல்படும் நோய்க்குறியியல் துறையில் (பெத்தாலஜி) திசு பரிசோதனை மற்றும் நுண்ணிய ஊசியின் மூலம் திசு பரிசோதனை செய்யும் (சைட்டோபதோலஜி) ஆய்வக நுட்பத்துக்கு தரச்சான்று கிடைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி அச்சான்று மருத்துவனை நோய்க்குறியியல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அத்தகைய சான்று பெற்ற விவரங்களுடன் கூடிய புதிய பெயா்ப் பலகையை மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன், நோய்குறியியல் துறை இயக்குநா் பாரதி வித்யா ஜெயந்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.

இந்த ஆய்வகத்தில் பரிசோதனை செய்தால் மறு பரிசோதனைக்கான அவசியம் ஏற்படாது என்பதை இச்சான்று உறுதிப்படுத்துவதாகவும், இத்தரச்சான்றிதழ் பெறுவதற்கான முயற்சியை கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வருவதாகவும் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா். மருத்துவமனையின் நிா்வாக அதிகாரி டாக்டா் எஸ்.சபிதா இச்சான்றிதழ் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தாா் எனவும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT