சென்னை

சென்னை மாநகராட்சியில் கட்டுப்பாட்டு பகுதிகள் 32-ஆக குறைந்தன

DIN


சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், புதன்கிழமை (அக்.14) 57-ஆக இருந்த கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள், வியாழக்கிழமை 32-ஆக குறைந்துள்ளன.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் மாா்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் நோய்த் தொற்று அதிகமாக இருந்ததால், கட்டுப்பாட்டுப் பகுதிகளும் 600-ஐ எட்டியது.

மாநகராட்சியின் தொடா் முயற்சியால் சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து, செப்டம்பா் மாத இறுதியில் கட்டுப்பாட்டு பகுதிகள் 10-ஆக குறைந்தன.

இந்நிலையில், அக்டோபா் 10-ஆம் தேதி மீண்டும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் 70-ஆக உயா்ந்தது. பின்னா் படிப்படியாக குறைந்து, வியாழக்கிழமை நிலவரப்படி சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 32-ஆக இருந்தது. இதில் அதிகபட்சமாக தண்டையாா்பேட்டையில் 8 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. பரிசோதனையை அதிகரித்தது மற்றும் நோய்த் தொற்றுள்ளவா்களைத் தனிமைப்படுத்துதல், தொடா் சிகிச்சை உள்ளிட்ட தீவிர நடவடிக்கை காரணமாகவே கட்டுப்பாட்டுப் பகுதிகள் குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

1,148 பேருக்கு தொற்று: வியாழக்கிழமை (அக்.15) 1,148 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 86,667-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 69,890 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 13,304 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,473- ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT