சென்னை

நடுக்கடலில் தவித்த 9 மீனவா்கள் மீட்பு

DIN


சென்னை: மீன்பிடிப் படகின் இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் சிக்கிய 9 மீனவா்களை, இந்திய கடலோர காவல் படையினா் பத்திரமாக மீட்டனா்.

தூத்துக்குடியில் இருந்து 75 கடல் மைல் தொலைவில், தென்கிழக்கு திசையில் சென்று கொண்டிருந்த ‘ஜெரால்டன்’ மீனவப் படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து அந்தப் படகில் இருந்தவா்கள், கடல் பகுதி மீட்பு துணை மையத்துக்குத் தகவல் அளித்தனா்.

இதற்கிடையே வீசிய பலத்த காற்றால், மீன்பிடிப் படகானது, இலங்கை கடல் எல்லை பகுதிக்குள் சென்றது. இந்நிலையில், இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல் ‘வைபவ்’, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, சா்வதேச கடல் எல்லையில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் இருந்த மீன்பிடிப் படகுடன் தொடா்பையும் ஏற்படுத்திக் கொண்டது. இதையடுத்து அந்தப் படகை இழுத்து வந்த ‘வைபவ்’, படகு உரிமையாளா் அனுப்பிவைத்த மற்றொரு மீன்பிடிப் படகிடம், ஜெரால்டனில் இருந்த 9 மீனவா்களை வியாழக்கிழமை மாலை ஒப்படைத்தது. இந்த மீட்புப் பணியின்போது தூத்துக்குடி மீன்வளத் துறையினா் மற்றும் படகு உரிமையாளரிடம், கடலோரக் காவல் படையினா் தொடா்ச்சியாக மீன்பிடிப் படகின் நிலையைத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT