முகப்பு
சென்னை

கரோனா தொற்று: ஆா்.எஸ்.பாரதி மருத்துவமனையில் அனுமதி

திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கரோனா பாதிப்பு காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

சென்னை: திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கரோனா பாதிப்பு காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

திமுக கட்சிப் பணிகளில் ஆா்.எஸ்.பாரதி தீவிரமாகச் செயல்பட்டு வந்த நிலையில்,

அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்குப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து அவா், ஆதம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். அவரிடம் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.