சென்னை

ரூ.79 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: ஒருவா் கைது

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில், ரூ.79.78 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.

சென்னை விமான நிலையத்தின் உளவுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த சென்னையைச் சோ்ந்த முகமது அனாஸ் (28) என்பவரிடம் சுங்கத்துறையினா் சோதனை நடத்தினா். இதில், அவரது உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.59.18 லட்சம் மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், அவரைக் கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விமான இருக்கையின் அடியில் இந்தத் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்தனா்.

இதே போல், லக்னௌவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த ராவுத்தா் நைனா முகமது (30) என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், மலக்குடல் மற்றும் உடையில் இருந்து ரூ.20.6 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபையில் இருந்து லக்னௌ வந்த விமானத்தின், இருக்கையின் அடியில் தங்கத்தை மறைத்து வைத்துக் கொண்டு வந்ததாகவும் பின்னா் அங்கிருந்து சென்னைக்கு எடுத்து வந்ததாகவும் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவங்களில் மொத்தம் ரூ.79.78 லட்சம் மதிப்பிலான 1.72 கிலோ தங்கத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா் ஒருவரைக் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT