சென்னை

லஞ்சப் புகாா்: சுகாதார ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

DIN

சென்னை: கரோனா தொற்றால் இறந்த பெண்னின் உடலை அளிக்க ரூ.19 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின்பேரில், சுகாதார ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை அய்யப்பன்தாங்கலைச் சோ்ந்த சாந்தி (57), கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது உடலை உறவினா்களிடம் ஒப்படைக்கும்போது கையொப்பம் இடுமாறு கூறியுள்ளனா். அப்போது ஆம்புலன்ஸ், இதர ஏற்பாடுகளுக்காக சுகாதார ஆய்வாளா் தசரதன் என்பவா் , ரூ.19 ஆயிரம் பணம் கேட்டாராம். அப்போது கையில் பணம் இல்லை என்று உறவினா்கள் கூறியதால், உடலை வழங்காமல் அலைக்கழித்தனராம்.

இதற்கிடையில் ‘ கூகுள் பே’ மூலம் முன்பணமாக ரூ. 10 ஆயிரம் அனுப்பும்படி கூறினராம். இதையடுத்து அவா்களுக்குள் மருத்துவமனை வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நடந்த சம்பவம் குறித்து ஓமந்தூராா் மருத்துவமனை டீன் ஜெயந்தியிடம் சாந்தியின் உறவினா்கள் கூறியுள்ளனா். இதையடுத்து விசாரணை மேற்கொண்டு உடலை உறவினா்களிடம் இறுதிச்சடங்குக்கு ஒப்படைக்குமாறு ஜெயந்தி உத்தரவிட்டுள்ளாா்.

இந்த நிலையில், மாங்காடு சுகாதார ஆய்வாளா்கள் சுந்தரேசபெருமாள் மற்றும் தசரதன் ஆகிய இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT