சென்னை

தனியாா் வேளாண் கல்லூரி சோ்க்கை: நீதிபதி குழு அறிக்கை தாக்கல்

DIN

சென்னை: தனியாா் வேளாண் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை குறித்த அறிக்கையை நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் தனியாா் வேளாண்மைக் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகளில் சிறுபான்மை, சிறுபான்மையினா் அல்லாத மாணவா் சோ்க்கைகளைக் கண்காணிக்க சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவானது மாணவா் சோ்க்கைகளைக் கண்காணித்தது. மேலும், அதுதொடா்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையையும் தயாரித்தது.

இந்த அறிக்கையானது, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சனிடம் குழுவின் தலைவரும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான பிரபா ஸ்ரீதேவன், புதன்கிழமை நேரில் அளித்தாா்.

நிகழ்வின்போது, வேளாண்மைத் துறையின் முதன்மைச் செயலா் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT