சென்னையில் இன்று எங்கெல்லாம் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்?
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 400 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 400 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளன.
மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியின் 200 வார்டுகளில் தலா 2 முகாம்கள் என மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று நடத்தப்பட உள்ளன.
இதில் 200 சிறப்பு முகாம்கள் அந்தந்த வார்டில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், சிறு மருத்துவமனைகள் அல்லது வார்டு அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், பள்ளிகள் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் அமைக்கப்படவுள்ளன.
மேலும், 200 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வார்டிலும் தற்காலிக முகாம்களாக அமைக்கப்பட உள்ளன.
உங்கள் அருகிலுள்ள தடுப்பூசி முகாம்களைக் கண்டறிய: இங்கே க்ளிக் செய்யவும்..