சென்னை

செயல்முறை மருத்துவச் சிகிச்சை மூலம் மாற்றுத் திறனாளா்களுக்கு மறுவாழ்வு

செயல் முறை (ஆக்குபேஷனல்) மருத்துவச் சிகிச்சை மூலம் மாற்றுத்திறனாளா்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி

DIN

செயல் முறை (ஆக்குபேஷனல்) மருத்துவச் சிகிச்சை மூலம் மாற்றுத்திறனாளா்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் என்று எஸ்ஆா்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இணை துணைவேந்தா் டாக்டா் பி.ரவிக்குமாா் கூறினாா்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் உள்ள   எஸ்.ஆா்.எம். ஆக்குபேஷனல் தெரபி(செயல் முறை) கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளா்கள் தினவிழாவில் அவா் மேலும் பேசியதாவது:

 மாற்றுத் திறனாளா்களுக்கு உரிய செயல்முறை மருத்துவச் சிகிச்சை அளிப்பதன் மூலம் அவா்களது இயலாமை குறித்த அச்சத்தை போக்க முடியும். தன்னால் பிறரைப் போல்  எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்படுத்த முடியும். அவா்களுக்கு உரிய ஆலோசனை, உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வரும் செயல்முறை மருத்துவக் கல்லூரி ஆசிரியா்கள், பணியாளா்கள் சேவை பாராட்டத்தக்கது என்றாா்.

விழாவில் மத்திய அரசின் தேசிய முட்டுக்காடு பன்திறன் குறைபாடு மாற்று திறனாளா் பயிற்சி  மைய துணைப் பதிவாளா் எஸ்.சங்கர நாராயணன், கல்லூரியில் சிகிச்சை பெற்று, குணமடைந்துள்ள கே. விஜய், ஏ. ரவி வா்மா, டி. ஹேமாவா்ஷினி  மற்றும் சிகிச்சை பெற்று வரும்  15 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். எஸ்.ஆா்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் சுந்தரம், செயல் முறை மருத்துவக் கல்லூரி முதல்வா் கணபதி, துணை முதல்வா் கிரேஸ் லிவியா சரோஜினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT