சென்னை

கராத்தே தியாகராஜன் இன்று பாஜகவில் இணைகிறாா்

DIN

சென்னை: முன்னாள் மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் பாஜகவில் வியாழக்கிழமை (பிப்.11) சேர உள்ளாா்.

சென்னை திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயில் அருகில் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இணைப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தலைமை வகிக்கிறாா். பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி முன்னிலையில் கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளா்களுடன் கட்சியில் இணைகிறாா்.

பாஜக தமிழக இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனா்.

நடிகா் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரும் பாஜகவில் இணைய உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT