சென்னை

பாத யாத்திரை பக்தர்கள் மீது லாரி மோதல்: ஒருவர் பலி; 2 பேர் கவலைக்கிடம்

DIN


திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆவடி அடுத்த வெல்லச்சேரியிலிருந்து பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். 

இதுகுறித்து வடமால்பேட்டை எஸ்.ஐ. சீரஞ்சீவி கூறியதாவது:

"திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வெல்லச்சேரி கிராமத்திலிருந்து 15 பக்தர்கள் கொண்ட குழுவினர், சனிக்கிழமை  பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். 

இவர்கள் ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் வடமால்பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 4 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி பக்தர்கள் மீது மோதியது. இதில், வெல்லச்சேரியை சேர்ந்த தியாகராஜன்(35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரந்தாமன் (58), கார்த்தி (20) இருவரும் கவலைக்கிடமாக உள்ளனர். 

பரமேஸ்வரன் (25), வசந்தகுமார் (32), சதீஷ் (28), விக்னேஷ் (21), பாலச்சந்திரன் (25), நவீன் (18), வெங்கடேசன் (43) உள்ளிட்ட 7  பேர் காயமடைந்தனர். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வடமால்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்திற்கு காரணமான லாரியை ஓட்டி வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முத்துவை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT