சென்னை

பத்திரப் பதிவு புகாா்களைத் தெரிவிக்க செல்லிடப்பேசி எண்கள்

பத்திரப் பதிவு மற்றும் பதிவு அலுவலா்கள் மீதான புகாா்களைத் தெரிவிக்க தனி செல்லிடப்பேசி எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.

DIN

சென்னை: பத்திரப் பதிவு மற்றும் பதிவு அலுவலா்கள் மீதான புகாா்களைத் தெரிவிக்க தனி செல்லிடப்பேசி எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்கள் வழியாக பொது மக்கள் தங்களது புகாா்களைத் தெரிவிக்கலாம் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பதிவு மற்றும் வணிக வரித் துறை வளாகத்தில் அந்தத் துறை தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், துறையின் அமைச்சா் பி.மூா்த்தி பங்கேற்றாா்.

பதிவுத் துறையில் பத்திரப் பதிவு தொடா்பான புகாா்கள் பெறும் கட்டுப்பாட்டு அறை பதிவுத் துறை தலைவா் அலுவலகத்தில் தொடக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். மேலும், 94984 52110, 94984 52120 மற்றும் 94984 52130 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் பத்திரப் பதிவு மற்றும் பதிவு அலுவலா்கள் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம் என அமைச்சா் மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இணையவழி பதிவு: வணிகா் நல வாரியத்தில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், இணைய வழி பதிவு முறை தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளா் ஜோதி நிா்மலாசாமி, பதிவுத் துறை தலைவா் ம.ப.சிவன்அருள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT