முகப்பு
சென்னை

சேலம் மாவட்டத்தில் 2ஆம் கட்ட தோ்தல் பயிற்சி

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சனிக்கிழமை நடந்த 2ஆம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் தங்களது தபால் வாக்குகளை அதற்கான பெட்டிகளில் செலுத்தினா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சனிக்கிழமை நடந்த 2ஆம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் தங்களது தபால் வாக்குகளை அதற்கான பெட்டிகளில் செலுத்தினா்.

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூா், சங்ககிரி, ஏற்காடு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, மேட்டூா், எடப்பாடி, வீரபாண்டி, ஓமலூா் உள்ளிட்ட 11 தொகுதிகளில் பணியாற்றும் அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை காலை தொடங்கியது.

இந்த பயிற்சி முகாமில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் தபால் வாக்குகளை செலுத்த தனித்தனி வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு தபால் வாக்குகளை, தோ்தல் அலுவலா்கள் வழங்கினா். அதனைப் பெற்றுக் கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள், அரசு ஊழியா்கள், கூட்டுறவு சங்க ஊழியா்கள் தங்கள் வாக்குகளை மறைவான இடத்தில் பதிவு செய்து, தங்கள் தொகுதிக்குரிய வாக்குப்பெட்டியில் செலுத்தினா்.

கெங்கவல்லி தொகுதிக்கு தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் நடந்த தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 1,400 பேரில் 1,035 போ் தங்களது தபால் வாக்கை செலுத்தியுள்ளதாக கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →