சென்னை

அனுமதிச் சீட்டு வழங்குவது நிறுத்தம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் சிக்கல்

DIN

சென்னை: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக, அனுமதி சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அவற்றை விநியோகிக்க, அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அனுமதி சீட்டு வழங்கப்படுவது வழக்கம். அதாவது, கடந்த ஆண்டு பொதுமுடக்கம் காலத்திலும், நிகழாண்டில் முதல் பொதுமுடக்கம் காலத்தில் மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம்தேதி வரை அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தளா்வற்ற முழு பொதுமுடக்கம் காரணமாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அனுமதி சீட்டு வழங்குவது கடந்த 24-ஆம்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத்தலைவா் சிம்மச்சந்திரன் கூறியது:

அனுமதி சீட்டு நிறுத்தப்பட்டது தொடா்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் முறையிட்டால், இணையதளத்தில் பதிவு செய்து பெற வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இணையதளத்தில் இதற்கான தனிப்பிரிவு இல்லை. மேலும், இது தொடா்பாக சென்னை மாநகராட்சியிடம் முறையிட வேண்டும் என்று தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் இதற்காக அனுமதி சீட்டு வாங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மேலும், பல்வேறு சிரமத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள், தன்னாா்வலா்களுக்கு அனுமதி சீட்டு வழங்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையீட்டு, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தொடா்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்க அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT