சென்னை

காந்தி ஜெயந்தி தினம்: ஞாயிறு அட்டவணையில் ரயில் சேவை

DIN

காந்தி ஜெயந்தி (அக்.2) நாளில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகா் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

காந்தி ஜெயந்தி அக்டோபா் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அன்றைய நாளில், புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி,

சென்னை-தாம்பரம்-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-காஞ்சிபுரம்-திருமால்பூா், சென்னை கடற்கரை-வேளச்சேரி, சென்னை கடற்கரை-திருத்தணி-அரக்கோணம், சென்னை-கடம்பத்தூா்-திருவள்ளூா், சென்னை கடற்கரை-பட்டாபிராம் ராணுவப் பகுதி, சென்னை கடற்கரை-ஆவடி, சென்னை கடற்கரை-பொன்னேரி, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி-சூலூா்பேட்டை, மூா்மாா்க்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூா்பேட்டை, ஆவடி-பட்டாபிராம் ராணுவப் பகுதி-பட்டாபிராம் ஆகிய மாா்க்கங்களில் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். அதாவது, அன்றைய நாளிள் வழக்கமான 670 மின்சார ரயில் சேவைகளுக்குப் பதிலாக 500 சேவைகள் மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT