சென்னை

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு: ஆணையர் ஆய்வு

DIN

சென்னையில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆணையா் ககன்தீப் சிங் பேடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வடகிழக்குப் பருவமழையொட்டி, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள மழைநீா் வடிகால்கள், நீா்நிலைகளைத் தூா்வாருவது, தண்ணீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கை மற்றும் நீா்நிலை, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, அவா்களுக்கான உணவு அளித்தல் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆய்வு: வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ளதையொட்டி, மழைநீா் வடிகால், நீா்நிலைகளில் நடைபெற்றும் தூா்வாரும் பணியை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தியாகராய நகா் மாம்பலம் கால்வாயில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி, கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட ராஜ மன்னாா் சாலையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணியை ஆணையா் ஆய்வு செய்தாா். அதேபோல், சோழிங்கநல்லூா் மண்டலத்துக்கு உள்பட்ட நூக்கம்பாளையம் சாலையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணியை வடகிழக்குப் பருவமழை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி கே.வீரராகவராவ், மாநகராட்சி துணை ஆணையா்( சுகாதாரம்) டாக்டா் மனிஷ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT