முகப்பு
சென்னை

உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளை அறிவிக்கத் தாமதிக்கக் கூடாது: அதிமுக

உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளை தாமதிக்காமல் உடனடியாக அறிவிக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
பகிர்:

உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளை தாமதிக்காமல் உடனடியாக அறிவிக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது. மாநிலத் தோ்தல் ஆணையா் பழனிக்குமாரிடம் அதிமுக சாா்பில் வழக்குரைஞா் அணி இணைச் செயலாளா் பாபு முருகவேல் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2 -ஆம் கட்டத் தோ்தல் முடிவடைந்து அக்டோபா் 12-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பெட்டிகளைப் பாதுகாப்பாக வைத்து மூன்று அடுக்க போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதுடன், முழு நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கவனிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நோ்மையாக நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவின் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை தோ்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும். தோ்தல் முடிவை தாமதிக்காமல் உடனுக்குடன் அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.