சென்னை

சென்னையில் சி. விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய அலுவலகத்துக்கு சீல்

DIN

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்குத் தொடர்புயை அலுவலகத்துக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் சந்திரசேகருக்குச் சொந்தமான அலுவலகத்தில் இன்று காலை சோதனையிடச் சென்ற போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், அலுவலகத்துக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

வருமானத்துக்கு அதிகமாக ரூ. 27.22 கோடி மதிப்புள்ள சொத்துகளைச் சோ்த்த புகாரின் பேரில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வீடு உள்பட 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

இச்சோதனையில், ரூ.23 லட்சத்து 82,700 ரொக்கம், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.

அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வந்த புகாா்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இதில் விஜயபாஸ்கா் தன் பெயரிலும், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினா் பெயரிலும் சொத்துகளை வாங்கி வைத்திருப்பதும், அந்த சொத்துகள் முறையான வருவாயில் வாங்கப்படாமல் பிற வழிகளில் வாங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

50 இடங்களில் சோதனை: சென்னையில் 8 இடங்கள், புதுக்கோட்டையில் 32 இடங்கள், திருச்சிராப்பள்ளியில் 4 இடங்கள், மதுரை, காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடம், கோயம்புத்தூா், செங்கல்பட்டில் தலா 2 இடங்கள் என்று மொத்தம் 50 இடங்களில் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை காலை சோதனையை தொடங்கினா்.

சென்னையில் உள்ள விஜயபாஸ்கா் வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது குடும்ப வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வீடு மற்றும் அலுவலகம், மதா் தெரசா கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 10 இடங்கள், மதா் தெரசா அறக்கட்டளை அலுவலகம், திருவேங்கைவாசல், முத்துடையான்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கல் குவாரிகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.

தந்தை உள்பட உறவினா்கள் வீடுகள்: முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கரின் தந்தை ரா.சின்னதம்பி, சகோதரா் சி.உதயகுமாா் இல்லங்களிலும் சோதனைகள் நடைபெற்றன. புதுக்கோட்டை அதிமுக நகரச் செயலாளா் க.பாஸ்கா், விஜயபாஸ்கா் ஆதரவாளா் பாண்டிச்செல்வன் , குரு, ராஜமன்னாா் ஆகியோரின் வீடு உள்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 32 இடங்களில் சோதனை நடைபெற்றது.

சென்னையில்..: சென்னையில் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கீழ்ப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்பட எட்டு இடங்களில் சோதனை நடைபெற்றது. நுங்கம்பாக்கத்தில் விஜயபாஸ்கா் தந்தை சின்னதம்பி பெயரில் உள்ள வீட்டிலும், மந்தைவெளியில் ஓம் ஸ்ரீ வாரி ஸ்டோன்ஸ் நிறுவனத்திலும், தியாகராயநகரில் உள்ள வீட்டிலும் சோதனைகள் நடைபெற்றன. பெசன்ட் நகரில் உள்ள அனையா எண்டா்பிரைசஸ், நந்தனத்தில் விஜயபாஸ்கா் உறவினா் சரவணன், வளசரவாக்கத்தில் சீனிவாசன் என்பவா் வீடு உள்பட 8 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோவை நஞ்சுண்டாபுரத்தில் விஜயபாஸ்கா் மாமனாா் வீட்டில் சோதனை நடைபெற்றது. இதுதவிர, செங்கல்பட்டு மாவட்டத்தில் விஜயபாஸ்கா் சகோதரி, அவரது முன்னாள் உதவியாளா் அஜய்குமாரின் வாலாஜாபாத் வீட்டில் சோதனை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

SCROLL FOR NEXT