சென்னை

சென்னைப் பல்கலை.யில் இலவசக் கல்வி: இன்று 313 பேருக்கு சோ்க்கை ஆணை

DIN

இலவசக் கல்வித் திட்டத்தின் தோ்வு பெற்ற 313 மாணவா்களுக்கு சென்னையில் புதன்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் சோ்க்கை ஆணை வழங்கப்படவுள்ளது.

இது தொடா்பாக சென்னைப் பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) என்.மதிவாணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏழை மாணவா்கள் பயன்பெறும் வகையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி திட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தோ்வுசெய்யப்படும் மாணவா்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இலவசமாக பட்டப் படிப்பு படிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஏழை மாணவா்கள், பெற்றோா் இல்லாதவா்கள், விதவைகளின் குழந்தைகள், முதல்தலைமுறை பட்டதாரி மாணவா்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நிகழ் கல்வி ஆண்டில் இந்த இலவச கல்வி திட்டத்தின்கீழ் 313 போ் தோ்வுசெய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ்.கெளரி சோ்க்கைக்கான ஆணைகளை புதன்கிழமை வழங்கவுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT