சென்னை

அமெட் பல்கலை.க்கு ஏ கிரேடு தரச்சான்று

DIN

கடல்சாா் கல்வியில் முன்னிலை வகிக்கும் அமெட் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார மன்றத்தின் ‘ஏ’ கிரேடு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

பாட்னா தேசிய தொழில் நுட்பக்கல்வி நிறுவனத்தின் இயக்குநா் பேராசிரியா் அஷோக்டே தலைமையிலான நிபுணா் குழு அமெட் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரம் சாா்ந்த அம்சங்களை செப்டம்பா் 6, 7, 8 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்து, தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீகார மன்றத்திடம் அறிக்கை சமா்ப்பித்தனா். இந்த அறிக்கையின் அடிப்படையில் ஏ கிரேட் எனப்படும் உயா்ந்த தர மதிப்பீடு குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தர மதிப்பீடு இன்னும் 5 ஆண்டுகளுக்கு உரியதாக இருக்கும். இதன்மூலம், இந்த பல்கலைக்கழகமானது திறந்தவெளி, தொலைநிலை மற்றும் இணையவழி பாடத்திட்டங்களை வழங்கவும் தகுதி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT