சென்னை: பள்ளிக்குழந்தைகள் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை எடுத்துக்கொள்வதன் மூலமாக அறிவை பெருக்குவதே இந்திய அஞ்சல் துறையின் குறிக்கோளாக உள்ளது.
இதனால், குழந்தைகளிடம் உள்ளிருக்கும் வரைதல் திறனைத் தூண்டுவதற்கும் மற்றும் தபால் தலை பற்றி அறிந்துகொள்வதற்கும், சிறப்பு தபால்தலை மையம், அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை - 600002, கோவிட் 19 தடுப்பூசி சம்பந்தமான சிறப்பு அட்டைகளை வடிவமைப்பதற்கான ஓவிய போட்டியை அதன் கருப்பொருளாக அதாவது 'கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு அஞ்சல் உறை போட்டி' என்னும் தலைப்பில் நடத்தியது.
போட்டி இரண்டு பிரிவுகளாக முதல் நிலை (வயது 6 - 10) மற்றும் இரண்டாம் நிலை ( வயது 11- 15) நடத்தப்பட்டது. முதன்மை பிரிவின் கீழ் -67 குழந்தைகள் மற்றும் இரண்டாம் பிரிவின் கீழ் 104 குழந்தைகள் பங்கேற்றனர். வரைதல் போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் குழந்தைகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.