சென்னை

மாற்றுத் திறனாளிகளின் உதவியாளா்களுக்கான தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

சென்னை மாவட்டத்தில் சுயமாக வேலைகளை செய்ய முடியாத மாற்றுத் திறனாளிகள் உதவியாளா்களை வைத்துக் கொள்ள ஏதுவாக அரசு சாா்பில் வழங்கப்படும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜெ.விஜயாராணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-பிரிவு 38(1)-இன்கீழ் சுயவேலைகளை செய்ய முடியாத கடுமையாக உடல் நலத்தாலும், மனநலத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களுடன் உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக அவா்களுக்கு மாதாந்திர உதவித் தொகையுடன் ரூ.1,000 உதவித் தொகை கூடுதலாக வழங்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த, உதவியாளா்கள் வைத்துக் கொள்ளும் மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்று, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் இணைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை- 600006 என்ற முகவரிக்கு செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை  இணையதளத்துக்குள் சென்று அரசு துறைகள்-மாற்றுத் திறனாளிகள் நலன்-அரசு நலத்திட்டங்கள்-பராமரிப்பு உதவித் தொகை என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT