முகப்பு
சென்னை

தற்கொலைக்கு முயன்றவரைக் காப்பாற்றிய காவலர்களுக்கு சைலேந்திர பாபு பாராட்டு

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு,  தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றவரைக் காப்பாற்றிய காவல்துறையினருக்கு பண வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
தற்கொலைக்கு முயன்றவரைக் காப்பாற்றிய காவலர்களுக்கு சைலேந்திர பாபு பாராட்டு
பகிர்:

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு,  தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றவரைக் காப்பாற்றிய காவல்துறையினருக்கு பண வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

கடந்த 27.09.2021 அன்று ஆழ்வார்பேட்டை பகுதியில். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் என்பவர் திடீரென்று தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அந்த பகுதியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் லலிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் பாபு, காவலர்கள்  கோபிநாத், ராஜசேகர்,  முனுசாமி மற்றும் கார்த்திக் ஆகியோர் உடனடியாக அந்த நபரின் மீது தண்ணீர் ஊற்றி தீக்குளிப்பதை தடுத்து அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பணியின் போது விழிப்புடன் இருந்து சமயோஜிதமாக செயல்பட்டு தீக்குளித்தவர் மீது உடனடியாக ஒரு முழு கேன் தண்ணீரை ஊற்றி தீயை அனைத்து அந்த நபரை காப்பாற்றியமைக்காக மேற்கண்ட காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைவர் முனைவர் செ. சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டியதோடு பண வெகுமதியும் வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.