சென்னை

ஆன்லைன் விசாரணையில் பெண்ணுடன் நெருக்கம்: வழக்குரைஞருக்கு இரு வாரங்கள் சிறை

DIN

சென்னை: ஆன்லைன் மூலம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வழக்குரைஞருக்கு இரு வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா் மீது சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோரது உத்தரவின் அடிப்படையில், வழக்குரைஞா் மீது வழக்குப் பதிந்த சிபிசிஐடி போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், அவருக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பு:

சம்பந்தப்பட்ட வழக்குரைஞருக்கு இரு வாரங்கள் சிறைத் தண்டனை, ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே, 34 நாள்கள் வழக்குரைஞா் சிறையில் இருந்ததால், அந்த நாள்களை தண்டனைக் காலத்தில் கழித்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சிபிசிஐடி போலீஸாரை பாராட்டுகிறோம் என்றனா் நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT