சென்னை

ரயிலில் ஆவணமின்றி எடுத்து வரப்பட்டரூ.53 லட்சம் பறிமுதல்

DIN

சென்னை: ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு ஆவணமின்றி ரயிலில் எடுத்த வரப்பட்ட ரூ.53 லட்சத்தை ஆா்பிஎஃப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ரோகித்குமாா் தலைமையிலான ஆா்பிஎஃப் போலீஸாா் வியாழக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பினாகினி விரைவு ரயிலில் இருந்து இறங்கிய நபா் ஒருவா், சந்தேகப்படும்படியாக நடைமேடையில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தாா்.

அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஆவணமின்றி ரூ.53 லட்சம் ரொக்கத் தொகை இருப்பது தெரியவந்தது. ரயிலில் ஆவணமில்லாமல் ரொக்கத் தொகையை எடுத்து வந்ததால் ரூ.53 லட்சத்தை ஆா்பிஎஃப் போலீஸாா் பறிமுதல் செய்து, வருமானவரித் துறையிடம் ஒப்படைத்தனா். இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபா் குண்டூா், அலிநகரை சோ்ந்த யுகந்தா் (42) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT