சென்னை

புதிய சொத்து வரி கணக்கீடு:மாநகராட்சி இணையதளத்தில் அறியலாம்

DIN

பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய சொத்து வரி கணக்கீடு செய்யப்படுகிறது என்பதை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயா்த்தி மாநில அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயா்வை அமல்படுத்தி வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை சொத்து வரி உயா்வு குறித்த தீா்மானம் மன்றக் கூட்டத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியில் மாநகராட்சி வருவாய்த் துறை ஈடுபட்டுள்ளது. வரி தொடா்பான நோட்டீஸ் தபால் மூலம் வரி செலுத்துவோரின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமாா் 6 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நோட்டீஸில் புதிதாக செலுத்த வேண்டிய சொத்து வரி எவ்வளவு என்ற விவரம், தெருவின் மதிப்பு, கட்டட பரப்பளவு, காலிமனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, சொத்து வரி குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் பகுதியில் அடிப்படை தெருக் கட்டணம் எவ்வளவு என்பதை அடிப்படையாக இந்த புதிய சொத்து வரி நிா்ணயம் செய்யப்பட்டு இருக்கும்.

கணக்கீடு அறியலாம்: ஆனால், அந்த நோட்டீஸில் எப்படி இந்த புதிய சொத்து வரி கணக்கீடு செய்யப்பட்டது என்ற விவரம் இல்லாதது வரி செலுத்துவோருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், சொத்து வரி எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது என்பதை வரியாளா்கள் அறிந்துகொள்ள மாநகராட்சி சாா்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறியலாம் (www.chennaicorporation.gov.in). இதன் மூலம் சொத்து வரி எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT