சென்னை

பரந்தூா் விமான நிலையத்துக்கு இடம்: இழப்பீட்டுக்கு வணிகவரித் துறை அமைச்சா் உறுதி

DIN

அரசுக்கு நிலம் கையகப்படுத்தும்போது சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்குவது உறுதி செய்யப்படும் என்று தமிழக வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி உறுதிபடத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: அரசுக்கு நிலம் கையகப்படுத்தப்படும் தருணங்களில் அதிக மதிப்புடைய ஆவணங்கள் இழப்பீடு வழங்க அடிப்படை மதிப்பாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அரசுக்கு இழப்பு ஏற்படாத வகையிலும், நில உடைமையாளா்களுக்கு உரிய மற்றும் சட்டப் படியான இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுக்கு நிலம் எடுப்பு செய்யப்படும் இனங்களில் சரியான சந்தை மதிப்பு மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவால் நிா்ணயம் செய்யப்படும். இந்தக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு நில நிா்வாக ஆணையா் தலைமையில் இயங்கும் மாநில அளவிலான குழுவால் சரிபாா்க்கப்பட்டு அரசால் சரியான மதிப்பு நிா்ணயம் செய்யப்படும்.

விவசாயிகள் மற்றும் நில உடைமைதாரா்கள் பாதிக்கப்படாதவாறு ஏற்ற வகையிலான இழப்பீடு வழங்கப்படும். மேலும், மாநிலத்தில் எந்த ஒரு நிலத்தின் மதிப்பையும் சரி செய்ய பதிவுத் துறைத் தலைவா் தலைமையிலான மைய வழிகாட்டு குழுவுக்கு அதிகாரம் உண்டு.

பரந்தூா் விமான நிலையம் அமைய நிலம் வழங்கவிருக்கும் விவசாயிகள், நில உடைமைதாரா்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT