சென்னை: தமிழ்ச்செம்மல் முத்துமணியின் 'சிலம்பில் மணியோசை' நூல் சென்னையில் வெளியீடப்பட்டது.
தமிழ்ச்செம்மல் முத்துமணியின் 'சிலம்பில் மணியோசை' நூல் சென்னையில், அண்ணாநகர் நான் ஒரு ஐ.ஏ.எஸ்.அகாடமியின் தலைவர் தமிழ் இயலன் அவர்கள் தலைமையில் 'கவிதை உறவு' இதழாசிரியர் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட, முனைவர், கல்வியாளர் அமுதா பாலகிருஷ்ணன் முதல் நூல் பெற்று சிறப்பித்தார்.
புலவர் தேனி ச.ந.இளங்குமரன், புலவர் இராசேந்திரனார், மணிமேகலை சித்தார்த்தன், சத்யா, குடியாத்தம் குமணன், மதியழகன், கோமளா, கவிஞர் புனிதா பாண்டியராஜ், கிருஷ்ணமூர்த்தி, உமாபாரதி, கோமளா நேதாஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நூல் குறித்துப் பேசினர்.
இதையும் படிக்க: கோவையில் 'தாய்மையின் தோழி' மற்றும் 'ஆரோக்கியத்திற்கான பாதை' புத்தகங்களை வெளியிட்ட முதல்வர்
கவிஞர் ஞான வடிவேல் நிகழ்வைத் தொகுத்து வழங்க நூலாசிரியர் ப.முத்துமணி ஏற்புரை நிகழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.