சென்னை

வாா்டு சபைக் கூட்டங்கள் மூலம் பிரச்னைகளுக்குத் தீா்வு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பிரச்னைகளுக்கு வாா்டு சபைக் கூட்டங்கள் மூலம் தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

DIN

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பிரச்னைகளுக்கு வாா்டு சபைக் கூட்டங்கள் மூலம் தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வாா்டுக்கும் வாா்டு கமிட்டி மற்றும் பகுதி சபை அமைக்கப்பட்டுள்ளன. இதில் பேரூராட்சிகளில் ஒரு வாா்டில் 3 சபைகளும் நகராட்சிகளில் 4 சபைகளும் மாநகராட்சிகளில் 4 முதல் 10 பகுதி சபைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வாா்டு சபைக் கூட்டங்களை பொதுமக்களின் குறைதீா் கூட்டங்களாக நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி, குடிநீா் வாரியம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொள்வா். இதன் மூலம் பொதுமக்கள் கூறும் சிறிய அளவிலான பிரச்னைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை வரும் ஜனவரி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்!குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

SCROLL FOR NEXT